எண்கள்
நமது கண்கள்

Named more than 1 Lakh Babies

Temples / கோவில்கள்
தமிழ்
English

மதுரை - ஒத்தக்கடை நரசிங்கவல்லி தாயார்

மிகப்பெரிய ஞானியாகிய ரோமச மகரிஷிக்கு, ஒரு நாள் திடீரென்று நரசிம்ம அவதாரத்தை காணும் ஆர்வம் வந்தது. அதற்காக நரசிம்மரை எண்ணி, பல ஆண்டுகள் கடுமையான தவம் இருந்தார். ஒரு நாள் நரசிம்மரும் பூலோகம் நடுநடுங்க,கடும் உக்கிரத்துடன் அவருக்கு காட்சி தந்தார். நரசிம்மரின் அவதாரத்தை கண்ட ரோமச மகரிஷி மிகவும் மகிழ்ந்தார். ஆனால் நரசிம்மரின் உக்கிரமோ கொஞ்சமும் தணியவில்லை. பிரகலாதனினைக் காக்க, கோபத்தோடு வந்த நரசிம்மரை, சிவபெருமான், சரபேஸ்வரராக வந்து கோபம் தணித்தார். அதுபோல இன்று ரோமச மகரிஷிக்காக கடும் கோபத்துடன் வந்த நரசிம்மரை, மகாலட்சுமி தாயார் அவரைப் போலவே ஆறடி உயரத்துடன் வந்து, அவரது கோபத்தை தணித்து, சாந்தப்படுத்த, அவர் யோக நரசிம்மராக அவ்விடத்தில் அமர்கிறார். அந்த இடமே மதுரையின் ஒத்தக்கடை. மற்ற கோவில்களில் எல்லாம் பெருமாள்களின் உயரத்திற்கு இணையாக இல்லாமல், அவரைவிட தாழ்ந்தோ, குறைந்த உருவத்தோடு சிறிய மூர்த்தியாகவோ தான், அன்னையின் உருவம் அமைந்திருக்கும். ஆனால், இந்த இடத்தில், ஆறடி உருவமாக, நம்மால் அன்னையை தரிசிக்க முடியும். இங்கு வருபவருக்கு, அவர்கள் கேட்கும் வரத்தை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்றும், லட்சுமி கடாட்சம் மூலமாக அவர்களது நிலையை உயர்த்த வேண்டும் என்றும் முனிவர் வரம் வாங்கிய இடமே, ஒத்தக்கடை யோக நரசிம்மர் ஆலயம்.

MADURAI - OTTHAKADAI NARASINGAVALLI THAYAR

The greatest sage, Romasa Maharishi, one day suddenly had a desire to see Narasimha Avatar. For that, counting on Narasimha, he did severe penance for many years. One day, Narasimha appeared to him with great fury, shaking the earth. Romasa Maharishi was very happy to see the incarnation of Narasimha.

But Narasimha's fury did not abate at all. Lord Shiva came as Sarabesvara to protect Pragalathan, when Narasimha came in anger and calmed down his anger. Similarly, today, when Narasimha came to Romasa Maharishi with great anger, Mother Mahalakshmi came with a height of six feet like him, and to appease and pacify his anger, he sits there as Yoga Narasimha. That place is the workshop of Madurai.

In all the other temples, the image of the mother is not equal to the height of Perumal, but lower than him, or as a small idol with a lower figure. But in this place, as a six-foot image, we can visit the Mother. Othakadai Yoga Narasimha Temple is the place where the sage took the boon that the person who comes here should be given the boon they ask for immediately and that their status will be elevated through Lakshmi Kataksha.

Whatsapp
Make a Call